/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை
மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை
மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை
மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை
ADDED : ஜூன் 18, 2024 12:14 AM

மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை
குன்றத்துார் - குமணன்சாவடி சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இருபுறமும், மழைநீர் வடிய கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
மாங்காடு அருகே அண்மையில் பெய்த சிறுமழைக்கே, கால்வாயில் தண்ணீர் செல்லாமல், சாலையிலேயே குட்டை போல் தேங்கி, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது.
சாலையோரம் அமைக்கும் வடிகால்வாயை முறையாக அமைக்காமல் கடமைக்காக செய்கின்றனர். மழைநீர், முறையாக கால்வாயில் வடியும் வகையில் திட்டமிட்டு அமைப்பதில்லை. இதனால், அரசு நிதி வீணாகிறது.
மழைக்காலம் துவங்கும் முன், அனைத்து சாலைகளிலும் உள்ள வடிகால்வாய் வழியே, மழைநீர் வெளியேற வழி அமைக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரத்தினம், குன்றத்துார்