/உள்ளூர் செய்திகள்/சென்னை/இசை விழாவில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்இசை விழாவில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
இசை விழாவில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
இசை விழாவில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
இசை விழாவில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
ADDED : ஜன 07, 2024 12:30 AM

மயிலாப்பூர்,
மயிலாப்பூர், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில், சிறப்பு குழந்தைகளுக்கான சூர்யா இசை பள்ளியின் முதலாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இசை பள்ளி நிறுவனரும், மறைந்த பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் பேத்தியுமான மருத்துவர் பிரபா குருமூர்த்தி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெண்டே, பா.ஜ., கலாசார பிரிவு தலைவர் வெங்கட், மருத்துவர்கள் ஷீபா, ரூஸ்வெல்ட், நடிகர் ஜீவா ரவி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் இளைய கட்டபொம்மன் ஆகியோருக்கு, பிரபா குருமூர்த்தி விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
எஸ்.கே., நாட்டிய கலா நிகேதன் அகாடமியின் கவிதா சீனிவாசன் தலைமையில், மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சியும், சூர்யா இசை பள்ளியின் சிறப்பு குழந்தைகளை பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
பிரபா குருமூர்த்தி பேசியதாவது, ''இசை பள்ளி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைகிறது. 'அறிவில்லா குழந்தைகளை வைத்துள்ளாய், பாடுவதற்கு மேடை கிடையாது' என்றனர். சூர்யா ரிதம்ஸ் இசைக்குழு ஆரம்பித்து, சிறப்பு குழந்தைகளை 90 மேடைகளில் ஏற்றி வெற்றி கண்டுள்ளோம்,'' பேசினார்.
ஹெண்டே பேசுகையில், 'நிறைவான மனிதர்கள் என யாரும் இல்லை. ஒவ்வொரிடமும் சில குறைகள் உள்ளன. இதனால் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் தான்,'' என்றார்.