ADDED : ஜன 13, 2024 12:03 AM

கீழ்ப்பாக்கம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காலை 9:30 மணிக்கு விழா துவங்கிய உடன், நுழைவாயல் கதவு மூடப்பட்டது. இதையடுத்து, 10:30 மணிக்கு மேல் வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், மாலைகளுடன் சாலையில் ஊர்வலமாக வந்தனர்.
பேருந்துகளை மடக்கி, போக்குவரத்து இடையூறு செய்தனர். மூடப்பட்ட நுழைவாயல் கதவின் மீது ஏறி, மாலைகளை அணிவித்து அட்டகாசம் செய்தனர். கீழ்ப்பாக்கம் போலீசார், மாணவர்களிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.