/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சிமாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
ADDED : ஜன 04, 2024 12:27 AM
பெரம்பூர், பெரம்பூரை சேர்ந்தவர் பாலாஜி. அவரது, 18 வயது மகள், சென்னையில் உள்ள மகளிர் கல்லுாரியில், பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார். அவரும், கொளத்துார் அடுத்த ஜி.கே.எம்., காலனியை சேர்ந்த விக்கி என்பவரும் காதலித்துள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தன்னிடம் பேச மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்கி, தன்னுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப் போவதாக மிரட்டி உள்ளார்.
அதனால், மன உளச்சலுக்கு ஆளான மாணவி, நேற்று முன் தினம் இரவு, வீட்டின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சுயநினைவை இழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளார்.