ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு நடத்தும் யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா ஏன் ?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு நடத்தும் யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா ஏன் ?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு நடத்தும் யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா ஏன் ?
UPDATED : ஜூலை 20, 2024 10:54 AM
ADDED : ஜூலை 20, 2024 10:23 AM

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவிக்காலம் முடிய, இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தலைவராக, மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். இவருக்கு வயது 59. இவர் 2017ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார்.
2023ம் ஆண்டு மே மாதம் யு.பி.எஸ்.சி., தலைவராக பதவியேற்றார். சமீபத்தில், யு.பி.எஸ்.சி தேர்வில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் இன்று(ஜூலை 20) பதவியை ராஜினாமா செய்தார். கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக மனோஜ் சோனி குறிப்பிட்டுள்ளார்.
தொண்டு செய்ய விருப்பம்
குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் பிரிவின் கிளையான அனுபவம் மிஷனில் தொண்டு செய்ய விரும்புகிறேன். போலி சான்றிதழ் வழங்கி, ஐ.ஏ.எஸ்., பணி பெற்ற பூஜா கேத்கர் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை என மனோஜ் சோனி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஒரு மாதத்திற்கு முன்பாக, ஜனாதிபதியிடம் கடிதம் வழங்கி உள்ளார்.
பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரிமீது புகார்
இதற்கிடையே, பார்வை மற்றும் மன ரீதியிலான பிரச்னை உள்ளிட்டவற்றை மறைத்தது மற்றும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இவருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.