ADDED : ஜன 08, 2024 01:08 AM
சென்னை:இந்திய ரக்பி கூட்டமைப்பு ஆதரவுடன், தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான 'சப் - ஜூனியர்' ரக்பி கால்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இன்று துவங்குகிறது.
இப்போட்டியின், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் 14 அணிகள், பெண்கள் பிரிவில் 14 அணிகள் என, மொத்தம் 28 அணிகள் பங்கேற்றுள்ளன.
கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கும் இப்போட்டிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்று வரையில் 'லீக்' முறையிலும், அதன் பின் 'நாக் அவுட்' முறையிலும் நடக்கின்றன.