Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

ADDED : மே 16, 2025 11:24 PM


Google News
சென்னை:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு உதவ, எஸ்.ஆர்.எம்., பல்கலை 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரான பாரிவேந்தர் எழுதியுள்ள கடிதம்:

தேசிய ஒற்றுமையையும், மனிதநேய பொறுப்பையும் பிரதிபலிக்கும் வகையில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பஹல்காம் பகுதியில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட, 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறது. மத்திய அரசு மற்றும் ஆயுதப்படைகள் மேற்கொண்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற வெற்றிகரமான முன்னெடுப்பு, நம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வலிமையின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த நடவடிக்கை, தேசத்திற்கு பெருமையை தந்துள்ளது. எஸ்.ஆர்.எம்., வழங்கும் 1 கோடி ரூபாய், பாதிக்கப்பட்டோரின் நலனுக்கும், மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உயர் கல்விக்கு தேவையான ஆதரவை, அவர்களின் கல்விப்பயணம் முழுமை அடையும் வரை எஸ்.ஆர்.எம்., நிறுவனம் வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us