/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி பள்ளிகளில் 86.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி; 12 மாணவர்கள் சென்டம், சைதை பள்ளி மாணவி முதலிடம் மாநகராட்சி பள்ளிகளில் 86.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி; 12 மாணவர்கள் சென்டம், சைதை பள்ளி மாணவி முதலிடம்
மாநகராட்சி பள்ளிகளில் 86.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி; 12 மாணவர்கள் சென்டம், சைதை பள்ளி மாணவி முதலிடம்

UPDATED : மே 17, 2025 05:12 AM
ADDED : மே 16, 2025 11:50 PM

சென்னை :சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 206 தொடக்கம், 130 நடுநிலை, 46 உயர்நிலை மற்றும் 35 மேல்நிலை என, 417 பள்ளிகள் உள்ளன.
இவற்றில் 2024 - 25ம் ஆண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் 86.10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.தேஜஸ்வினி, 500க்கு, 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ஷோபனா, 491 மதிப்பெண்; சூளைமேடு மேல்நிலை பள்ளி மாணவர் எஸ்.அருண், 487 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும், 400ல் இருந்து 449 வரை, 659 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 1,963 மாணவர்கள் பெற்றுள்ளனர்.