/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு
பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு
பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு
பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு
ADDED : மே 11, 2025 12:40 AM
பாடி, பாடி திருவல்லீஸ்வரர் கோவில், குருஸ்தலம் என பெயர் பெற்றது. இக்கோவில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது.
அதன்படி, இந்தாண்டு குருபகவான், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு, குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சி, இன்று காலை 7:00 மணியில் இருந்தும், குருபரிகார ஹோமம் மாலை 4:00 முதலும் துவங்கி நடக்கிறது.
இதில், சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர், குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், 250க்கும் மேற்பட்ட போலீசாரும், 110க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.