ADDED : மே 11, 2025 12:39 AM
திருப்போரூர்,
திருப்போரூர் அடுத்த ஆமூர் ஏரியில், நேற்று முன்தினம், ஆண் உடல் மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மானாமதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மானாமதி போலீசார், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.