/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுபாலம், கால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் வெள்ளம் சிறுபாலம், கால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் வெள்ளம்
சிறுபாலம், கால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் வெள்ளம்
சிறுபாலம், கால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் வெள்ளம்
சிறுபாலம், கால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் வெள்ளம்
ADDED : செப் 22, 2025 03:19 AM
தாம்பரம்: தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில், எரிவாயு தகனமேடை அருகே சிறுபாலம் மற்றும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கியுள்ளது.
தாம்பரம் - கிஷ்கிந்தா சாலை, 24 மணி நேரமும் போக்குவரத்து கொண்டது. இச்சாலையில், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, எரிவாயு தகனமேடை அருகே சாலையில் தேங்கும் வெள்ளம், அங்குள்ள சிறுபாலம் மற்றும் கால்வாய் வழியாக அருகேயுள்ள ஏரிக்கு செல்லும்.
இந்த சிறுபாலமும், கால்வாயும் துார்வாரப்படாத காரணத்தால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், லேசான மழைக்கே மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்குகிறது. பின், அது வடிய பல நாட்கள் ஆவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையில், இப்பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிப்போரும், அவ்வழியாக செல்வோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து புகார் தெரிவித்தால், நான்காவது மண்டல பொறியியல் பிரிவினர், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இனியாவது அங்குள்ள சிறுபாலத்தை துார்வாரி, மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.