/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜல்லடியன்பேட்டை மூழ்கும் அபாயம் உபரிநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை ஜல்லடியன்பேட்டை மூழ்கும் அபாயம் உபரிநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
ஜல்லடியன்பேட்டை மூழ்கும் அபாயம் உபரிநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
ஜல்லடியன்பேட்டை மூழ்கும் அபாயம் உபரிநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
ஜல்லடியன்பேட்டை மூழ்கும் அபாயம் உபரிநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 22, 2025 03:18 AM

ஜல்லடியன்பேட்டை: ஜல்லடியன்பேட்டை ஏரியின் உபரி நீர் வெளியேற போக்கு கால்வாய் அமைக்காவிட்டால், ஏரியை ஒட்டி அமைந்துள்ள, 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெருங்குடி மண்டலம், வார்டு 191க்கு உட்பட்ட ஜல்லடியன்பேட்டை ஏரி, 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பினால், உபரி நீர் வெளியேற போக்கு கால்வாய் இல்லை.
இதனால், ஏரியை ஒட்டிய புதுநகர், நெசவாளர் நகர் பகுதியில் உள்ள, 500க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது.
இந்த ஏரிக்கு, இரு இடங்களில் மதகுகள் அமைந்துள்ளன. இந்நீர் வெளியேறும் பகுதிகள் விவசாய பட்டா நிலங்களாக இருந்து, தற்போது வீட்டு மனைகளாக மாறி, அதில் நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் அமைந்துள்ளன.
இதனால், இப்பகுதி வெள்ளம் சூழும் என்பதால், இங்கு வாழும் மக்கள் மதகுகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, ஏரியின் கலங்கல் நீர் வெளியேறும் பகுதியான, பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.ஜி.பி., பிரபு நகர் பிரதான சாலையில் இருந்து, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் பிரதான சாலையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்வாயுடன் இணைக்கும் வகையில் போக்கு கால்வாய் அமைத்தால் மட்டுமே, இப்பகுதி வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க இயலும்.
மழைக்காலம் நெருங்குவதால், கலங்கல் நீர் வெளியேறும் வகையில், போக்கு கால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.