/உள்ளூர் செய்திகள்/சென்னை/பள்ளி மாணவிக்கு தொல்லை சிலம்ப ஆசிரியர் கைதுபள்ளி மாணவிக்கு தொல்லை சிலம்ப ஆசிரியர் கைது
பள்ளி மாணவிக்கு தொல்லை சிலம்ப ஆசிரியர் கைது
பள்ளி மாணவிக்கு தொல்லை சிலம்ப ஆசிரியர் கைது
பள்ளி மாணவிக்கு தொல்லை சிலம்ப ஆசிரியர் கைது
ADDED : ஜன 04, 2024 12:28 AM

கொடுங்கையூர்,கொடுங்கையூரை சேர்ந்த 17 வயது சிறுமி, மூன்று ஆண்டுகளாக கொடுங்கையூர், எருக்கஞ்சேரியை சேர்ந்த சிலம்ப ஆசிரியர் கார்த்திக், 46, என்பவரிடம் சிலம்பம் கற்று வந்தார்.
நேற்று முன்தினம் சிறுமியின் சைக்கிள் டயர் பஞ்சரானதால், அவர் வீட்டுக்கு வந்து ஆசிரியர் கார்த்திக், தன் பைக்கில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு முன், 2020ல் சிறுமியை காரில் அழைத்துச் சென்ற கார்த்திக் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில், சிறுமியின் தாய் புகார் செய்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை நேற்று போலீசார் கைது செய்தனர்.