/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் உந்து நிலையம் இரு நாட்கள் செயல்படாது கழிவுநீர் உந்து நிலையம் இரு நாட்கள் செயல்படாது
கழிவுநீர் உந்து நிலையம் இரு நாட்கள் செயல்படாது
கழிவுநீர் உந்து நிலையம் இரு நாட்கள் செயல்படாது
கழிவுநீர் உந்து நிலையம் இரு நாட்கள் செயல்படாது
ADDED : செப் 14, 2025 03:09 AM
சென்னை: வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை மேம்பால கட்டுமான பணிக்காக, அம்பேத்கர் கல்லுாரி சாலையில் உள்ள 1,050 மி.மீ., விட்டம் உடைய கழிவுநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், 15, 16ம் தேதிகளில், ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள, சில கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.
இயந்திர நுழைவாயில் வழியாக, கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது. அதுபோன்ற நேரங்களில், லாரி வாயிலாக கழிவுநீர் வெளியேற்றப்படும்.
இதற்கு, ராயபுரம் - 81449 30905, திரு.வி.க.நகர் - 81449 30906, அண்ணா நகர் - 81449 30908, தேனாம்பேட்டை - 81449 30909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.