/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி 'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி
'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி
'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி
'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி
ADDED : செப் 14, 2025 03:11 AM
சென்னை:'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானங்கள், தாமதமாக இயக்கப்பட்டதால் பயணியர் அவதியடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12:35 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய 'ஏர் இந்தியா' விமானம், ஒன்றரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 2:05 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதேபோல, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12:55 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 2:25 மணிக்கு புறப்பட்டது.
மேலும், நேற்று முன்தினம் இரவு 10:10 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண் டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12:40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காலை 5:40 மணிக்கு புறப்படும் விமானம், மூன்று மணி நேரம் தாமதமாக, காலை 8:40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணியர் அவதியடைந்தனர்.
விமானங்களின் தாமதம் குறித்து, பயணியருக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பயணியர் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.