ADDED : மார் 25, 2025 02:05 AM
சென்னை:உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் அறிவியல் நகரம் சார்பில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில், அறிவியல் விழா நடக்க உள்ளது.
அண்ணா பல்கலை,சென்னை பல்கலை, தமிழக அறிவியல்தொழில்நுட்ப மையம், இந்திரா காந்தி அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன.
இதில், அறிவியல் கண்காட்சி அரங்குகள், செயல்முறை விளக்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை நடக்க உள்ளன.