/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உதவி கமிஷனர் மீது ஊழல் புகார் துணை கமிஷனர் விசாரணை உதவி கமிஷனர் மீது ஊழல் புகார் துணை கமிஷனர் விசாரணை
உதவி கமிஷனர் மீது ஊழல் புகார் துணை கமிஷனர் விசாரணை
உதவி கமிஷனர் மீது ஊழல் புகார் துணை கமிஷனர் விசாரணை
உதவி கமிஷனர் மீது ஊழல் புகார் துணை கமிஷனர் விசாரணை
ADDED : மார் 25, 2025 02:05 AM
திருமங்கலம்,அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பிரசன்னா - திவ்யா தம்பதி. இவர்களுக்கு, 9 வயதில் மகன் உள்ளார். இத்தம்பதிக்கு, சில மாதங்களுக்கு முன் விவாகரத்து வழங்கிய அமெரிக்க நாட்டின் நீதிமன்றம், குழந்தையை இருவரும் மாறி மாறி வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் திவ்யா, குழந்தையுடன் சென்னை வந்துள்ளார். பின், இம்மாதம் முதல் வாரத்தில், குழந்தையை பிரசன்னாவின் உதவியாளர் கோகுல கிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.
ஆனால், மீண்டும் குழந்தையை திவ்யாவிடம் ஒப்படைக்கவில்லை. இதனால், திருமங்கலம் காவல் நிலையத்தில் திவ்யா கடந்த 9ம் தேதி புகார் அளித்தார். போலீசார் கோகுலகிருஷ்ணனிடம் பிடித்து விசாரித்தனர்.
இதற்கிடையில், 'எங்கள் குடும்ப பிரச்னையை தீர்க்க, திருமங்கலம் உதவி கமிஷனர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் தன்னிடம், 25 லட்சம் ரூபாய் கேட்டனர்' என, பிரசன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரசன்னா குற்றச்சாட்டின்உண்மை தன்மையை விசாரிக்க, அண்ணா நகர் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.