/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி திறப்பு: தி.நகரில் குவிந்த மக்கள் பள்ளி திறப்பு: தி.நகரில் குவிந்த மக்கள்
பள்ளி திறப்பு: தி.நகரில் குவிந்த மக்கள்
பள்ளி திறப்பு: தி.நகரில் குவிந்த மக்கள்
பள்ளி திறப்பு: தி.நகரில் குவிந்த மக்கள்
ADDED : ஜூன் 01, 2025 09:53 PM
தி.நகர்:கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில், பொருட்கள் வாங்க நேற்று மக்கள் குவிந்தனர்.
குறிப்பாக, பென்சில், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள், வாட்டர் பாட்டில், பேக் உள்ளிட்டவை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.
மேலும், பள்ளி சீருடைகள், காலணி வாங்க ஜவுளி உள்ளிட்ட கடைகளிலும் குழந்தைகளுடன் பெற்றோர் வந்திருந்தனர்.
இதனால், ரங்கநாதன் தெரு திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது:
'ஸ்மார்ட் சிட்டி' பணியால், பாண்டி பஜார் தியாகராயர் சாலையின் குறுக்கு தெருக்களில் உள்ள கடைகளில் மக்கள் வரமுடியாததால், வியாபாரம் குறைந்து விட்டது. மேலும், மெட்ரோ ரயில் பணி மற்றும் தி.நகரில் நடக்கும் மேம்பால பணிகளால், வாகனங்களை பார்க்கிங் செய்ய போதுமான இடவசதியில்லை.
இதனால், கடந்தாண்டை ஒப்பிடுகையில் மக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தற்போது பள்ளிகளிலேயே அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனால், முன்னர் இருந்தது போல் வியாபாரம் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.