Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில்வேயில் வேலை வாங்கிதருவதாக மோசடி  

ரயில்வேயில் வேலை வாங்கிதருவதாக மோசடி  

ரயில்வேயில் வேலை வாங்கிதருவதாக மோசடி  

ரயில்வேயில் வேலை வாங்கிதருவதாக மோசடி  

ADDED : ஜன 14, 2024 02:14 AM


Google News
ஓட்டேரி, அயனாவரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்,25. ரயில்வேயில் எட்டு பேருக்கு வேலை வாங்கி தருவதாக கொளத்துார், ஜவஹர் நகரை சேர்ந்த ரயில்வேயில் எலக்ட்ரிக்கல் துறையில் வேலை பார்க்கும் கவுரவ்குமார், 40 என்பவரிடம் 13 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை வாங்கித்தராமல் இருந்துள்ளார். கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதையடுத்து கடந்தாண்டு நவ., 2ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விக்னேஷ் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 13ம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள லாட்ஜில் கவுரவ்குமார் தங்கியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us