ADDED : பிப் 24, 2024 12:15 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., நிதியில் பம்மல், நல்லத்தம்பி சாலையில், 1.12 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலக்கூடம், கடப்பேரி ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா, நேற்று நடந்தது.
சிறு, குறு, தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., பாலு ஆகியோர் பங்கேற்று, இவற்றை திறந்து வைத்தனர்.
மேலும், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், திருநீர்மலை பிராதான சாலையில் 22.36 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தாம்பரம்-- - வேளச்சேரி சாலையில் 45.24 லட்சம் ரூபாய் மதிப்பிலும், எல்.இ.டி., மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
'அம்ரூத்' திட்டத்தில் 68.80 லட்சம் ரூபாய் மதிப்பில், தாம்பரம் வெற்றி நகரில் கன்னியம்மன் கோவில் குளம் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டது.