ADDED : பிப் 23, 2024 11:58 PM
கொடுங்கையூர்,கொடுங்கையூர், லட்சுமியம்மன் தெருவில் முட்டை கடை நடத்தி வருபவர் ரமாராணி, 55. இவரது கடைக்கு, நேற்று முட்டை வாங்க, 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்துள்ளார்.
முட்டை வாங்கிய மர்ம நபர், ரமாராணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின் முட்டையை பைக்கில் வைத்து விட்டு வருவதாக கூறிய மர்ம நபர், திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த ரமாராணி கல்லா பெட்டியை பார்த்தபோது, 20,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
கொடுங்கையூர் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.