/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஓ.சி.எப்., கோப்பை கிரிக்கெட் ரைசிங் ஜவான்ஸ் அணி 'சாம்பியன்'ஓ.சி.எப்., கோப்பை கிரிக்கெட் ரைசிங் ஜவான்ஸ் அணி 'சாம்பியன்'
ஓ.சி.எப்., கோப்பை கிரிக்கெட் ரைசிங் ஜவான்ஸ் அணி 'சாம்பியன்'
ஓ.சி.எப்., கோப்பை கிரிக்கெட் ரைசிங் ஜவான்ஸ் அணி 'சாம்பியன்'
ஓ.சி.எப்., கோப்பை கிரிக்கெட் ரைசிங் ஜவான்ஸ் அணி 'சாம்பியன்'
ADDED : ஜூன் 10, 2025 12:29 AM

சென்னை, திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், ஓ.சி.எப்., மேலாளர் கோப்பைக்கான யு - 13 கிரிக்கெட் போட்டிகள், ஆவடியில் நடந்தன. இதில், இரு குழுக்களாக பிரிந்து லீக் முறையில் மோதிய எட்டு அணிகளில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதியில் மோதின.
அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.பி.ஆர்., சி.ஏ., மற்றும் ரைசிங் ஜவான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எஸ்.பி.ஆர்., சி.ஏ., அணி, 29.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 116 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த ரைசிங் ஜவான்ஸ் சி.ஏ., அணி, 19.3 ஓவர்களில், மூன்று விக்கெட் இழந்து, 86 ரன்கள் அடித்திருந்த போது மழை பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது.
இறுதிப் போட்டியின் போது, மழை உள்ளிட்ட காரணங்களால் ஆட்டம் தடைபட்டால், வி.ஜெ.டி., எனும் கணக்கீடு அடிப்படையில், நியாயமான முறையில் முடிவு அறிவிக்கப்படும்.
அதன்படி, ரைசிங் ஜவான்ஸ் அணிக்கு, கூடுதலாக 58 ரன்கள் வழங்கப்பட்டது. அதனால், 28 ரன்கள் வித்தியாசத்தில் ரைசிங் ஜவான்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக எஸ்.பி.ஆர்., அணியின் பிரஜீத் இந்திராதி, சிறந்த வீரராக அதே அணியின் ஜிஷ்ணு, பந்து வீச்சாளராக ரைசிங் ஜவான்ஸ் வீரர் பிரமோதன், ஆல்ரவுண்டராக லிட்டிங் ஸ்டார்ஸ் வீரர் சுதீப் ஆகியோர் தேர்வாகினர்.