/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பணிகள் முழுமை பெறாமல் மாணிக்கம் நகர் சுரங்கபாதை திறப்பு பணிகள் முழுமை பெறாமல் மாணிக்கம் நகர் சுரங்கபாதை திறப்பு
பணிகள் முழுமை பெறாமல் மாணிக்கம் நகர் சுரங்கபாதை திறப்பு
பணிகள் முழுமை பெறாமல் மாணிக்கம் நகர் சுரங்கபாதை திறப்பு
பணிகள் முழுமை பெறாமல் மாணிக்கம் நகர் சுரங்கபாதை திறப்பு
ADDED : ஜூன் 10, 2025 12:28 AM

திருவொற்றியூர், பணிகள் முழுமை பெறாமலேயே, மாணிக்கம் நகர் சுரங்கபாதை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில், 30 க்கும் மேற்பட்ட நகர்களில், 50,000 க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியினர், திருவொற்றியூர் கிழக்கு மற்றும் நெடுஞ்சாலை பகுதிக்கு செல்ல, மாணிக்கம் நகர் சுரங்கபாதையை பயன்படுத்தி வந்தனர்.
சுரங்கபாதை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதாலும், ஊற்று நீர் சுரப்பு காரணமாகவும், பலவீனமடைந்தது. இதனால், மராமத்து பணிகளை மேற்கொள்ள தொடர் கோரிக்கைகள் எழுந்தன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னை மாநகராட்சி - பாலங்கள் துறையால், 1.5 கோடி ரூபாய் செலவில், மாணிக்கம் நகர் சுரங்கபாதையில் மராமத்து பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. கோடை விடுமுறைக்குள், இப்பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.
ஆனால், துறைகள் அனுமதி மற்றும் ஒப்பந்ததார் பணியை தாமதமாக துவக்கியது உள்ளிட்ட காரணங்களால், மே 26 ல் பணிகள் துவங்கின.
இதற்கிடையில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மராமத்து பணிகளுக்காக, சுரங்கபாதை மூடப்பட்டிருந்தால், பள்ளி மாணவர்கள், ஆபத்தான நிலையில், தண்டவாளத்தை கடந்து சென்றனர். சரக்கு ரயில் மணிக்கணக்கில் நிற்க நேரிடும் போது, ரயிலுக்கு அடியில் புகுந்து சென்றனர்.
இதனையடுத்து, சுரங்கபாதை பணிகளை பார்வையிட்ட மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் விஜயபாபு உள்ளிட்டோர் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இருப்பினும், ஒப்பந்ததாரர் பணியை மந்த கதியில் மேற்கொண்டு வந்த நிலையில், அப்பகுதியினர் அவ்வபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகளும் நெருக்கடி தரவே, வேறு வழியின்றி, மராமத்து பணிகள் முழுமை பெறாமலே, நேற்று காலை சுரங்கபாதையில், டூ - வீலர் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.