Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தீர்மானம்

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தீர்மானம்

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தீர்மானம்

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தீர்மானம்

ADDED : ஜூலை 02, 2025 12:21 AM


Google News
வேளச்சேரி, வேளச்சேரி நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நலவாழ்வு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

வேளச்சேரி டான்சி நகர் நலவாழ்வு சங்க கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கல்லுகுட்டை முதல் வேளச்சேரி ரயில் நிலையம் வரை, மூடு கால்வாய் அமைக்க வேண்டும்.

வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள மூடுகால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை, அதிகாரிகள் செயல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us