/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்
குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்
குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்
குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்
ADDED : ஜன 28, 2024 12:25 AM

சென்னை,தமிழக அரசு சார்பில், சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், அரசு துறைகள் சார்பில், 22 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அணிவகுத்த ஊர்தியில், 'கிண்டி பல்நோக்கு மருத்துவமனை முகப்பு, இதயம் காப்போம், நடக்கலாம் வாங்க' உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் இடம் பெற்றன.
அதேபோல், தேசிய அளவில், மருத்துவத் துறையில் தமிழகம் பலவற்றில் முதலிடம் பிடித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வகையில், தீயணைப்பு துறை வாகனங்கள் முதலிடம் பெற்ற நிலையில், இரண்டாவது இடத்தை, மக்கள் நல்வாழ்வு துறைபெற்றுள்ளது.
இதற்கான கேடயத்தை, கவர்னர் ரவி, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடியிடம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தேநீர் விருந்தில் வழங்கினார்.