ADDED : பிப் 06, 2024 12:55 AM

சென்னை, ராயபுரத்தில் விபத்துகள், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை அடையாளம் காணவும், போலீசாருக்கு உதவும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஆனால் ராயபுரம், மாதா கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் பராமரிப்பின்றி, கீழே பார்த்தபடி தொங்குகின்றன. ஒயரும் பழுதடைந்து தொங்குகின்றன. இந்த கேமராக்கள், பயனின்றி காட்சிப் பொருளாக உள்ளன.
எனவே, விரைந்து கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயபுரம், மாதா கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பின்றி கீழே தொங்கியபடி காட்சியளிக்கின்றன.