/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரும்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு அரும்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு
அரும்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு
அரும்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு
அரும்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு
ADDED : ஜூன் 05, 2025 12:29 AM

அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கத்தில் அமைந்தகரை - கோயம்பேடு செல்லும் சாலை உள்ளது.
இங்குள்ள திருவீதி அம்மன் கோவில் எதிர்புறத்தில், 3ம் தேதி இரவு, சாலையின் நடுவே, பெரிதாக விரிசல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் காலை, ஜே.சி.பி., இயந்திரத்தால் சாலையை தோண்டியபோது, கான்கிரீட் ரெடிமேட் பாக்ஸ் வைத்து கட்டமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய், 5 அடி பள்ளத்தில் சரிந்து, சாலை உள்வாங்கியது தெரிந்தது.
மேலும், வடிகால்வாய் கீழ் அமைந்துள்ள, கூவத்திற்கு செல்லும் கழிவுநீர் குழாயில், விரிசல் ஏற்பட்டு, நீர் கசிந்து, மண் அரிப்பும் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் உள்வாங்கிய 'ரெடிமேட் பாக்ஸ்' வடிகால்வாயை தோண்டி எடுத்து, சேதமடைந்த இடங்களை சீரமைத்து, மீண்டும் வடிகால்வாயில் அதே இடத்தில் வைத்தனர்.
பின், சாலையில், புதிதாக 'பேஜ் ஒர்க்' செய்தது போல், கான்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டது. நேற்று மாலை முதல், வழக்கம் போல் வாகனங்களும் அவ்வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.