/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது
உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது
உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது
உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது
ADDED : ஜூன் 05, 2025 12:30 AM

செங்குன்றம், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணுார் ஆகிய பகுதிகளில், சட்ட விரோத மது விற்பனை குறித்து சோதனை நடத்தினர்.
இதில், பொன்னேரி நந்தியம்பாக்கம் பகுதியில், உரிமம் இன்றி மது விற்பனை கூடம் நடத்தி, மது பாட்டில் விற்ற, மணலியை சேர்ந்த சேகர், 62, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து, 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
மதுக்கூடம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.