/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாடகை கார் ஒட்டுநர்கள் ஏர்போர்டில் அடாவடி வாடகை கார் ஒட்டுநர்கள் ஏர்போர்டில் அடாவடி
வாடகை கார் ஒட்டுநர்கள் ஏர்போர்டில் அடாவடி
வாடகை கார் ஒட்டுநர்கள் ஏர்போர்டில் அடாவடி
வாடகை கார் ஒட்டுநர்கள் ஏர்போர்டில் அடாவடி
ADDED : ஜூன் 11, 2025 12:53 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்படாத வாடகை கார் ஒட்டுநர்கள் உலா வருவது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை விமான நிலைய பயணியர், ப்ரீபெய்ட் டாக்ஸி, ஒலா, உபேர் உள்ளிட்டவற்றை, செயலி வாயிலாக வரவழைத்து செல்வது வழக்கம். விமான நிலையத்தில் பயணியர் பாதுகாப்பை கருதி, அங்கீகரிக்கப்பட்ட வாடகை கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் பிரச்சனை இல்லாமல் பயணியர் செல்ல முடியும்.
ஆனால், சில மாதங்களாக அங்கீகரிக்கப்படாத ஒட்டுநர்கள் சிலர், விமான நிலைய வருகை பகுதியில் பயணியரை வழிமறித்து பேரம் பேசுவது, குறைந்த கட்டணம் என கூறி அழைத்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த விஷயத்தில் போலீசாரும் மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
வேலை நிமித்தமாக அடிக்கடி பெங்களூரு சென்று திரும்புவது வழக்கம். பிக் -அப் பாயின்ட் பகுதிக்கு செல்லும் நேரத்தில், டி1 முனையத்தின் எதிர்புற பகுதியில் இருந்து கும்பலாக வரும் ஓட்டுநர் சிலர், குறைந்த பணத்தில் செல்லாம் என, வற்புறுத்துகின்றனர். வேண்டாம் என்றால், அவர்கள் நடவடிக்கை அடாவடியாக மாறுகிறது. இதற்கு போலீசார் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏர்போர்ட் போலீசார் கூறுகையில், 'வாடகை கார் ஓட்டுநர்கள் சிலர், கார்களை சாலையில் நிறுத்திவிட்டு ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விடுகின்றனர். அவர்கள், பயணியரை வழிமறித்து, தங்கள் கார்களுக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், பயணியர் தரப்பில் இது வரை எந்த புகாரும் வரவில்லை. நேரில் பார்த்தால் எச்சரித்து அனுப்புகிறோம்' என்றனர்.
***