/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெட்ரோ ரயில் துாண் அமைக்கும் பணி முடிந்த இடங்களில் தடுப்புகள் அகற்றம்மெட்ரோ ரயில் துாண் அமைக்கும் பணி முடிந்த இடங்களில் தடுப்புகள் அகற்றம்
மெட்ரோ ரயில் துாண் அமைக்கும் பணி முடிந்த இடங்களில் தடுப்புகள் அகற்றம்
மெட்ரோ ரயில் துாண் அமைக்கும் பணி முடிந்த இடங்களில் தடுப்புகள் அகற்றம்
மெட்ரோ ரயில் துாண் அமைக்கும் பணி முடிந்த இடங்களில் தடுப்புகள் அகற்றம்
ADDED : ஜன 05, 2024 12:23 AM

சோழிங்கநல்லுார், சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்தில் நடக்கிறது.
இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிட்காட் வரை, 45 கி.மீ., துாரத்தில், 28 சுரங்கபாதை ரயில் நிலையங்கள் மற்றும் 19 மேம்பால ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இதில், ஓ.எம்.ஆரில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சோழிங்கநல்லுார் வரை, 10 கி.மீ., துாரத்தில், 90 அடி இடைவெளியில், 449 துாண்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு துாணும் 45 அடி உயரம் உடையது. இந்த பணியை, எல்.அண்ட்.டி., நிறுவனம் செய்கிறது.
பணிக்காக ஆறு வழிச்சாலையான ஓ.எம்.ஆர்., நான்கு வழியாக மாற்றப்பட்டது. துாண் அமைத்து, ‛பியர் கேப்' பொருத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில், மேட்டுக்குப்பம் முதல் கண்ணகி நகர் வரை மற்றும் ஒக்கியம் மடு முதல் காரப்பாக்கம் வரை, 1.2 கி.மீ., துாரத்தில், பியர் கேப் பொருத்தப்பட்ட, 25 துாண்கள் அமைந்த இடங்களில், தடுப்பு அகற்றப்பட்டு வருகிறது. இதனால், மீண்டும் ஆறு வழி சாலையாக மாற்றும் பணி நடக்கிறது.
தடுப்பு அற்றப்பட்ட பகுதியில், மைய தடுப்பு அமைத்து, சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால், ஓ.எம்.ஆரில் குறிப்பிட்ட துாரத்தில் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், ‛பியர் கேப்' பொருத்தப்பட்ட துாண்களில் ‛யு-கிரேடர்' இணைக்கும் பணி, இன்று இரவு துவங்க உள்ளது. இதற்காக, இரவு 11:00 முதல் காலை 6:00 மணி வரை, அரை கி.மீ., துாரத்தில் உள்ள ஒருவழிபாதை, இருவழி பாதையாக மாற்றப்பட உள்ளது.