/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளிக்கரணையில், 18,145 பறவைகள் முகாம் 12 ஆண்டுகளுக்கு பின் சிவப்பு தாரா வருகை பள்ளிக்கரணையில், 18,145 பறவைகள் முகாம் 12 ஆண்டுகளுக்கு பின் சிவப்பு தாரா வருகை
பள்ளிக்கரணையில், 18,145 பறவைகள் முகாம் 12 ஆண்டுகளுக்கு பின் சிவப்பு தாரா வருகை
பள்ளிக்கரணையில், 18,145 பறவைகள் முகாம் 12 ஆண்டுகளுக்கு பின் சிவப்பு தாரா வருகை
பள்ளிக்கரணையில், 18,145 பறவைகள் முகாம் 12 ஆண்டுகளுக்கு பின் சிவப்பு தாரா வருகை
ADDED : மார் 17, 2025 11:55 PM

சென்னை,
தமிழகம் முழுதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு மார்ச், 8, 9, 15, 16ம் தேதிகளில் வனத்துறை வாயிலாக நடத்தப்பட்டது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும், இப்பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 127 வகையைச் சேர்ந்த, 18,145 பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. நீர் பறவைகள் மட்டுமல்லாது நிலம் சார்ந்த பறவைகளும் பள்ளிக்கரணையில் இருப்பது இந்த கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது.
இது குறித்து, கணக்கெடுப்பில் ஈடுபட்ட 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ஜனவரியில், 60,000 பறவைகள் இருந்தன. இது பிப்., மாதம், 36,000 ஆக குறைந்தது.
இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 18,145 பறவைகள் இருப்பது உறுதியாகி உள்ளது. உள்ளான் வகை பறவைகள் சீசன் முடிந்து சென்றதால் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறிப்பாக, 2012க்கு பின் தற்போது, இங்கு இரண்டு சிவப்பு தாரா பறவைகள் வந்துள்ளது கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளது.
இவை வழக்கமாக, பனி படர்ந்த இமயமலையில் லடாக், திபெத் போன்ற பகுதிகளில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும்.
காட்டுவாத்து இனங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இப்பறவைகள், அரிய வகை பறவையாக உள்ளது. இதே போன்று, செந்தலை பூங்குருவி, நீல தொண்டை ஈ பிடிப்பான் போன்ற பறவைகளும் இங்கு வந்துள்ளன.
வனத்துறை உயரதிகாரிகள் மேற்பார்வையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மை பாதுகாக்கப்படுவதற்கு இப்பறவைகளின் வருகை சான்றாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.