/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வரும் 13 -- 16ம் தேதி வரை வீடுகளுக்கு ரேஷன் சப்ளை வரும் 13 -- 16ம் தேதி வரை வீடுகளுக்கு ரேஷன் சப்ளை
வரும் 13 -- 16ம் தேதி வரை வீடுகளுக்கு ரேஷன் சப்ளை
வரும் 13 -- 16ம் தேதி வரை வீடுகளுக்கு ரேஷன் சப்ளை
வரும் 13 -- 16ம் தேதி வரை வீடுகளுக்கு ரேஷன் சப்ளை
ADDED : செப் 11, 2025 02:29 AM
சென்னை, தமிழகத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு கடந்த மாதம் துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ் வேனில் ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளின் அறிவிப்பு பலகையில் இருந்து, வினியோக தேதியை கார்டுதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.