/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேலும் 2 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம் மேலும் 2 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
மேலும் 2 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
மேலும் 2 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
மேலும் 2 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
ADDED : செப் 11, 2025 02:30 AM
சென்னை :எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணியால், மேலும் இரண்டு விரைவு ரயில்கள் வரும் 17 முதல் நவ., 9 வரை, தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 734.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், காந்தி இர்வின் சாலை பக்கத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டியும், பூந்தமல்லி சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதேபோல, ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில் புதிய நடைமேம்பாலம் அமைப்பது, நடைமேடைகளில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், எழும்பூரில் இருந்து செல்ல வேண்டிய பெரும்பாலான விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில், வரும் 17 முதல் நவ., 9ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.