/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில்வே பாலம் சாலையில் மழைநீர் தேங்கி பாதிப்பு ரயில்வே பாலம் சாலையில் மழைநீர் தேங்கி பாதிப்பு
ரயில்வே பாலம் சாலையில் மழைநீர் தேங்கி பாதிப்பு
ரயில்வே பாலம் சாலையில் மழைநீர் தேங்கி பாதிப்பு
ரயில்வே பாலம் சாலையில் மழைநீர் தேங்கி பாதிப்பு
ADDED : செப் 15, 2025 12:48 AM

வில்லிவாக்கம்; அதி காலையில் ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே, வில்லிவாக்கம், சுரங்கப்பாலம், சர்வீஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம் பகுதி உள்ளது. ஒவ்வொரு மழைக்கும், இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கம். அதை தடுக்க, அப்பகுதியில் புதிதாக மழைநீர் வடிகால்வாய்கள் மாநகராட்சியால் அமைக்கப்பட்டன.
இருப்பினும், மழைநீர் வழக்கம் போல் தேங்குகிறது. நேற்று அதிகாலை பெய்த ஒரு சில மணிநேர மழைக்கே, வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாலத்தில் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை உட்பட பல இடங்களில், சிறிய குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:
வில்லிவாக்கத்தில், வழக்கம் போல் இந்தாண்டும் மழைநீர் தேங்குகிறது.
அதிகாலை சில மணிநேரம் பெய்த லேசான மழைக்கே, பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
அதேபோல் சிட்கோ நகரில், சில தெருக்களில் குப்பையுடன் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.