மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : ஜன 25, 2024 12:50 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், பெரியார் நகரில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், திருவொற்றியூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பங்கேற்று, 149 மாணவர்கள், 167 மாணவியர் என, 316 பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அதே போல், ராமகிருஷ்ணா பள்ளியில், 21 மாணவர்கள், ஒன்பது மாணவியர் என, 30 மாணவ - மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்களை, எம்.எல்.ஏ., வழங்கினார்.