/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொடுங்கையூர் கிடங்கை அகற்ற போராட்டம் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம் கொடுங்கையூர் கிடங்கை அகற்ற போராட்டம் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கொடுங்கையூர் கிடங்கை அகற்ற போராட்டம் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கொடுங்கையூர் கிடங்கை அகற்ற போராட்டம் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கொடுங்கையூர் கிடங்கை அகற்ற போராட்டம் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மார் 18, 2025 12:11 AM
கொடுங்கையூர், கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர் எவர் விஜிலென்ட் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம், நேற்று நடந்தது.
அதில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 1,248 கோடி ரூபாய் மதிப்பீடில், 75 ஏக்கர் பரப்பளவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை அமைக்கும் திட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி அளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், குப்பை எரி உலை திட்டத்தின் ஆபத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
கொடுங்கையூர் குப்பை கிடங்கை, இப்பகுதியில் இருந்து முழுமையாக அகற்றக்கோரி சட்ட போராட்டம் நடத்தப்படும். ஆங்காங்கே உள்ள நலச்சங்கங்கள், தனித்தனியாக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்படும்.
குப்பை எரி உலை திட்டத்தின் ஆபத்து, விளைவுகள், பாதிப்பு குறித்தும் நலச்சங்கங்களின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதனால் பாதிக்கப்படும் அனைத்து ஊர்களின் சங்கங்களையும் இணைத்து, பல்முனை போராட்டங்கள் மேற்கொள்ளப்படும். இது குறித்து கூட்டமைப்பின் உயர்மட்ட குழு ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.