/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
UPDATED : ஜூலை 08, 2024 06:14 PM
ADDED : ஜூலை 08, 2024 03:55 PM

சென்னை: ரவுடியிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன். புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது.
நடவடிக்கை
ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டப்படும். போக்குவரத்து சிக்கல்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். போலீஸ் அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் குற்றங்கள் நடப்பது குறையும். இவ்வாறு அவர் கூறினார்.