/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்வரங்களை சிறப்பாக கையாண்ட பிரின்ஸ் ராம வர்மாஸ்வரங்களை சிறப்பாக கையாண்ட பிரின்ஸ் ராம வர்மா
ஸ்வரங்களை சிறப்பாக கையாண்ட பிரின்ஸ் ராம வர்மா
ஸ்வரங்களை சிறப்பாக கையாண்ட பிரின்ஸ் ராம வர்மா
ஸ்வரங்களை சிறப்பாக கையாண்ட பிரின்ஸ் ராம வர்மா
ADDED : ஜன 05, 2024 12:41 AM

ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மற்றும் ரசிகா பைன் ஆர்ட்ஸ் இணைந்து, 20ம் ஆண்டு இசை விழாவை மேற்கு மாம்பலம், ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளியில் வளாகத்தில் நடத்தின.
இதில், பிரின்ஸ் ராம வர்மா கச்சேரி விமரிசையாக நடந்தது. துவக்கமாக, 'அம்பா ஆனந்ததாயினி' என்ற பாடலை, கம்பீரமாக கம்பீரநாட்டை ராகத்தில் பாடினார். கண்டஜாதி அடதாளத்தில் பைரவி ராகத்தில், பச்சிமிரியம் ஆதியப்பர் இயற்றிய வர்ணத்தை சம்பிரதாயமாக பாடினார்.
அப்பைய தீட்சிதர் இயற்றிய 'மோகனராக வரவீணா' கீதம்பாடி, ஸ்வரங்கள் சேர்த்தார். 'என்ன குற்றம் செய்தேனோ' என்ற உசேனி ராக மிஸ்ரசாபு தாளத்தில் எம்.டி.ராமநாதன் இயற்றிய பாடலை, விறுவிறுப்பாக பாடி விளக்கினார்.
நவரச கண் டை ராகத்தில் அமைந்த சுவாதி திருநாள் இயற்றிய 'கீர்த்தனை வந்தே ஸதாபத்மநாபம்' கீர்த்தனையை பாடியபோது, எஸ்.ஆர்.வினு வயலின், பி.ஹரிகுமார் மிருதங்கம் வாசித்து அசரடித்தனர்.
வகுளாபரனம் ராகத்தில் 'குமாரா' என்ற பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய கீர்த்தனை பாடி, ஸ்வரங்களுடன் சிறப்புற பாடி முடித்தார். இறுதியாக, பாலமுரளிகிருஷ்ணா இயற்றிய கதனகுதுாகலம் தில்லானா பாடி, கச்சேரியை நிறைவு செய்தார்.
- நமது நிருபர் -