ADDED : ஜூன் 01, 2025 12:39 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், 28; மீன் வியாபாரி. இவரது மனைவி அருண்மொழி, 25. அருண்மொழி கர்ப்பமாக இருக்கும் நிலையில், தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன், அருண்மொழி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த உறவினர்கள், அருண்மொழியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அருண்மொழி நேற்று உயிரிழந்தார்.
பூந்தமல்லி போலீசார், வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டு வருகிறார்.