/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிடங்கு இல்லாத கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் நிர்வாகம் அலட்சியம் வணிகர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் நஷ்டம் கிடங்கு இல்லாத கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் நிர்வாகம் அலட்சியம் வணிகர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் நஷ்டம்
கிடங்கு இல்லாத கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் நிர்வாகம் அலட்சியம் வணிகர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் நஷ்டம்
கிடங்கு இல்லாத கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் நிர்வாகம் அலட்சியம் வணிகர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் நஷ்டம்
கிடங்கு இல்லாத கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் நிர்வாகம் அலட்சியம் வணிகர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் நஷ்டம்
ADDED : ஜூன் 01, 2025 12:38 AM

கொருக்குப்பேட்டை தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் கீழ், கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் ஷெட் உள்ளது. இது சென்னையில் உள்ள பெரிய ரயில்வே கூட்ஸ் ஷெட்; 144 ஏக்கர் பரப்பு கொண்டது.
சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில், முழு நேரமும் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதில் இருந்தும், கோதுமை, அரிசி, சோளம் உள்ளிட்ட உணவு பொருட்கள் சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வருகின்றன. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு, அவற்றை வணிகர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
மாதந்தோறும் 40க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் வந்து செல்வதால், ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், வருவாய் ஈட்டியும் அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என, வணிகர்கள் குமுறுகின்றனர். இதனால், மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து வணிகர்கள் கூறியதாவது:
கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ் ஷெட்டில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், 24 மணி நேரமும் செயல்பட முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இரவில் சரக்குகளை ரயிலில் இருந்து லாரிகள் மூலம் எடுக்க முடியாத நிலை உள்ளது.
ரயிலில் சரக்குகள் வந்தால், எட்டு மணி நேரத்திற்குள் சரக்குகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஒரு மணி நேரத்திற்கு, ஒரு பெட்டிக்கு 150 ரூபாய் வீதம், 42 பெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு 6,300 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுவே ஒருநாள் என்றால் 1.51 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மழைக்காலம், லாரி, சுமைதுாக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், வணிகர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
லாரி வர தாமதம் ஏற்பட்டு, தரையில் சரக்குகளை இறக்கி வைத்தாலும், 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன்பின் பெட்டி ஒன்றிற்கு, ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாய் வீதம் 42 பெட்டிகளுக்கு, ஒரு மணி நேரத்திற்கு 6,300 ரூபாய் வீதம், வார்ப்பேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவும் ஒரு நாள் என்றால்
1.51 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட்டை பொறுத்தவரை, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை மழைக்காலத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்க, கிடங்கு வசதி இல்லை.
உணவு பொருள்களை, ரயில் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனில், இரண்டு நாட்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
எனவே, வணிகர்கள், ஆலை உரிமையாளர்கள் நலன் கருதி, உணவு பொருட்கள் இறக்கி வைக்க, கிடங்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் யூனியன் அமைப்பு பொதுச் செயலர் எஸ்.சார்லஸ் கூறியதாவது:
இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை வணிகர்கள் சரிபார்க்க வந்தாலும், அவர்களுக்கென ஓய்வறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பில் போடுவதற்கு கூட இடம் இல்லாததால், வியாபாரிகள் தெருவில் நின்று பில் போடும் நிலைமையே உள்ளது.
சுமை துாக்கும் தொழிலாளிகள், லாரி டிரைவர்களை வெட்டி, பணம், மொபைல் போன்கள் பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன. ரயில் பெட்டில்களில் உள்ள பார்சல்களையும், மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர்.
போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால், பெண்கள் இரவில் கூட்ஸ் ஷெட்டில் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.
கோடிக்கணக்கிலான பொருட்கள் வந்திறங்கும் இங்கு, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 10க்கும் உட்பட்டோரே பணிபுரிகின்றனர்.
இவர்களில் ஐந்து பேர் மாற்று பணிக்காக பேசின்பாலம் ரயில் நிலையம் சென்று விடுகின்றனர். இதுகுறித்து சுமை துாக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில், ரயில்வே நிர்வாகத்தினர் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.