/உள்ளூர் செய்திகள்/சென்னை/பி.எச்.எச்., வகை ரேஷன் கார்டு உறுப்பினர் விரல்ரேகை பதிவு அவசியம்பி.எச்.எச்., வகை ரேஷன் கார்டு உறுப்பினர் விரல்ரேகை பதிவு அவசியம்
பி.எச்.எச்., வகை ரேஷன் கார்டு உறுப்பினர் விரல்ரேகை பதிவு அவசியம்
பி.எச்.எச்., வகை ரேஷன் கார்டு உறுப்பினர் விரல்ரேகை பதிவு அவசியம்
பி.எச்.எச்., வகை ரேஷன் கார்டு உறுப்பினர் விரல்ரேகை பதிவு அவசியம்
ADDED : பிப் 24, 2024 12:04 AM
தமிழகத்தில் மக்களின் தேவை, வருவாய் மற்றும் விண்ணப்பத்தின் அடிப்படையில் ஐந்து வகையான குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதில் ஏழை, எளியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் பி.எச்.எச்., மற்றும் பி.எச்.எச்-.ஏ.ஏ.ஒய்., முன்னுரிமை குடும்ப அட்டையும் ஒன்று.
இந்த அட்டைதாரர்களுக்கு மத்திய, மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகை தகுதியானவர்களுக்கு சென்றடைகிறதா என்பதை பரிசோதிக்கும் வகையில் பி.எச்.எச்., மற்றும் பி.எச்.எச்-.ஏ.ஏ.ஒய்., குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு, சம்பந்தப்பட்ட துறை வாயிலாக பிறப்பிக்கப்பட்டு அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்திற்குள் கைரேகை பதிவு செய்யப்படாத குடும்ப அட்டைகள், சலுகைக்கான தகுதி இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த வகை குடும்ப அட்டைதாரர்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்யும்படி, நியாய விலைக் கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
- -நமது நிருபர்- -