/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 12 ஆண்டாக சாமியார் போல சுற்றிய பெரம்பூர் கொலை குற்றவாளி கைது 12 ஆண்டாக சாமியார் போல சுற்றிய பெரம்பூர் கொலை குற்றவாளி கைது
12 ஆண்டாக சாமியார் போல சுற்றிய பெரம்பூர் கொலை குற்றவாளி கைது
12 ஆண்டாக சாமியார் போல சுற்றிய பெரம்பூர் கொலை குற்றவாளி கைது
12 ஆண்டாக சாமியார் போல சுற்றிய பெரம்பூர் கொலை குற்றவாளி கைது
ADDED : செப் 14, 2025 10:49 PM

ஓட்டேரி:நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து போலீசாருக்கு 'தண்ணி' காட்டிய, பெரம்பூரைச் சேர்ந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையில், பல்வேறு கோவில்களுக்கு சென்று துாய்மை பணியில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெரம்பூரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 41. ரவுடியாக வலம் வந்த இவர், கடந்த 2004ம் ஆண்டு, ஜோன்ஸ் என்பவரை கொலை செய்தார்.
மேலும், அயனாவரம், அண்ணா நகர், ஆர்.கே., நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை முயற்சி உட்பட 21 வழக்குகள் உள்ளன. இதையடுத்து, 'ஏ' பிரிவு ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
ஜானகிராமனை பிடிக்க, நீதிமன்றம் ஐந்து முறை 'பிடிவாரன்ட்' பிறப்பித்திருந்தது. ஆனால், போலீசிடம் சிக்காமல், 12 ஆண்டுகளாக 'தண்ணி' காட்டி வந்தார்.
இதனிடையே, சேலம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், ஜானகிராமனை மடக்கி பிடித்து, நேற்று முன்தினம் ஓட்டேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
'தற்போது எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கோவில்களுக்கு சென்று, துாய்மை பணி செய்து வருகிறேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவரை கைது செய்த ஓட்டேரி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.