/உள்ளூர் செய்திகள்/சென்னை/மது போதை நபர்களால் பாதசாரிகளுக்கு இடையூறுமது போதை நபர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு
மது போதை நபர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு
மது போதை நபர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு
மது போதை நபர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு
ADDED : ஜூன் 25, 2024 12:14 AM
மது போதை நபர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு
வேளச்சேரி விரைவு சாலை, 150 அடி அகலம் உடையது. இந்த சாலையோரம், 5 அடி அகலத்தில் நடைபாதை உள்ளது. காலை, மாலையில் நடைபயிற்சி செய்கிறோம்.
சிலர், போதையில் நடைபாதையில் விழுந்து அங்கேயே துாங்கி விடுகின்றனர். வாந்தி எடுப்பது, கழிப்பறையாக பயன்படுத்துவது என நடைபாதையை நாசப்படுத்தி உள்ளனர். அரைகுறை ஆடையுடன் கிடப்பதால், பெண்கள், குழந்தைகள் முகம் சுளிக்கின்றனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள இடமானதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமலும், நடைபயிற்சி செய்ய முடியாமலும் சிரமமாக இருக்கிறது. போதை நபர்களை, போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்.
- சி.மணி, 48,
வேளச்சேரி