/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடிகாலில் நிரம்பி வழியும் குப்பை கழிவுகள் சிறு மழைக்கே குடியிருப்புகளில் வெள்ளம் சூழும் அபாயம் வடிகாலில் நிரம்பி வழியும் குப்பை கழிவுகள் சிறு மழைக்கே குடியிருப்புகளில் வெள்ளம் சூழும் அபாயம்
வடிகாலில் நிரம்பி வழியும் குப்பை கழிவுகள் சிறு மழைக்கே குடியிருப்புகளில் வெள்ளம் சூழும் அபாயம்
வடிகாலில் நிரம்பி வழியும் குப்பை கழிவுகள் சிறு மழைக்கே குடியிருப்புகளில் வெள்ளம் சூழும் அபாயம்
வடிகாலில் நிரம்பி வழியும் குப்பை கழிவுகள் சிறு மழைக்கே குடியிருப்புகளில் வெள்ளம் சூழும் அபாயம்
ADDED : ஜூன் 25, 2024 12:12 AM

சென்னை,
பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 3.5 கி.மீ., துாரத்தில் வடிகால் உள்ளது. சாலையின் அகலத்தை பொறுத்து, 2 முதல் 4 அடி அகலத்தில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதியில், ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படும். லேசான மழைக்கே, வடிகால் நிரம்பி செல்லும். ஆனால், வடிகால் நீரோட்டம் பார்த்து கட்டமைக்காததால், பல இடங்களில் வடிகாலுக்குள் பல நாட்கள் மழைநீர் தேங்கி நிற்கும்.
வடிகால் மூடியை திருடி, அதில் உள்ள இரும்பு பொருட்களை விற்பனை செய்வதால், மூடி இல்லாமல் வடிகால்கள் உள்ளன. இதனால், அந்த ஓட்டைகள் வழியாக தேவையற்ற மண், கல் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர்.
சிறுமழைக்கே, வடிகாலில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் அதை துார் வார வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அப்பணிக்கான நிதியை வாரியம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில், வாரிய குடியிருப்பு உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், அவர்கள் செய்ய வேண்டிய பணியை நாங்கள் செய்கிறோம். இங்கு, 200க்கும் மேற்பட்ட பிளாக்குகள் உள்ளன.
வாரியம் நிதி ஒதுக்காததால், ஒப்பந்ததாரர்களிடம் ஒரு பிளாக்குக்கு 1,000 ரூபாய் வீதம் வசூலித்து துார் வாருகிறோம். அரசியல் பின்புலம் உள்ள சில ஒப்பந்ததாரர்கள் பணம் தருவதில்லை. இதனால், நாங்களே சொந்த பணம் போட்டு துார் வாருகிறோம்.
இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, இந்த பணியை செய்கிறோம். வடிகால் சுத்தம் செய்ய, பழுதடைந்த மின்சார கேபிள்களை மாற்ற, பணத்திற்கு பிறரிடம் கையேந்தும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.