/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சைதை நீதிமன்றம் அருகே பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு சைதை நீதிமன்றம் அருகே பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு
சைதை நீதிமன்றம் அருகே பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு
சைதை நீதிமன்றம் அருகே பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு
சைதை நீதிமன்றம் அருகே பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு
ADDED : மே 21, 2025 12:37 AM
சைதாப்பேட்டை :கிண்டி, சர்தார்பட்டேல் சாலை, கவர்னர் மாளிகை உள்ளிட்ட பகுதியில் வடியும் மழைநீரை, அடையாறு ஆற்றில் கொண்டு செல்ல, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, சர்தார்பட்டேல் சாலையில் இருந்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரே தாலுகா சாலை வழியாக, அடையாறு ஆறு வரை மழைநீர் வடிகால் கட்டப்பட்டது.
இதற்காக, நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஐந்து நிழற்குடைகளில் இரண்டு நிழற்குடைகள் தகர்க்கப்பட்டன. இரண்டு நிழற்குடைகளில், சில வழக்கறிஞர்கள் பயன்படுத்துவதால், பயணியர் அதில் அமருவதில்லை.
மீதமுள்ள ஒரு நிழற்குடையில் பயணியர் அமருகின்றனர். கோடையில் அவ்வப்போது, திடீரென மழை பெய்வதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் ஒரு நிழற்குடையில் முண்டியத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் பயணியர் மழையில் நனைந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வடிகால் பணி முடிந்து இரண்டு மாதங்களாகியும் தகர்க்கபட்ட நிழற்குடையை நிமிர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
வழக்கறிஞர்கள் குடை போட்டு பயன்படுத்தும் இடத்தில், வழக்கு தொடர்பாக வருபவர்கள் கூடி நிற்பதால், அங்கும் பயன்படுத்த முடியவில்லை. வடிகால் பணிக்காக தகர்த்த நிழற்குடையை நிமிர்த்தி வைக்க வேண்டும். வழக்கறிஞர்கள், பயணியருக்கு வழிவிட்டு நகர்ந்து செல்ல முன்வர வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.