/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நடு ரோட்டில் தீப்பிடித்த கார் காயமின்றி பயணியர் தப்பினர் நடு ரோட்டில் தீப்பிடித்த கார் காயமின்றி பயணியர் தப்பினர்
நடு ரோட்டில் தீப்பிடித்த கார் காயமின்றி பயணியர் தப்பினர்
நடு ரோட்டில் தீப்பிடித்த கார் காயமின்றி பயணியர் தப்பினர்
நடு ரோட்டில் தீப்பிடித்த கார் காயமின்றி பயணியர் தப்பினர்
ADDED : செப் 19, 2025 12:57 AM

வண்டலுார், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே, நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், காரிலிருந்த இரு பயணியர் காயமின்றி உயிர் தப்பினர்.
வண்டலுார் அடுத்த காயரம்பேடு ஊராட்சியைச் சேர்ந்தவர் கண்ணன், 29. இவர், நாவலுாரில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியர்களை, தனக்குச் சொந்தமான, 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' காரில் அழைத்துச் செல்லும் பணி செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 8:40 மணியளவில், பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த இரு ஊழியர்களை காரில் ஏற்றிக் கொண்டு, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் சென்றார்
இரவு 9:30 மணியளவில், வண்டலுார், கிரசன்ட் கல்லுாரி அருகே சென்றபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது.
உடனே, காரை சாலையோரம் நிறுத்திய கண்ணன், காருக்குள் இருந்த இரு ஊழியர்களையும் அவசரமாக கீழே இறக்கி உள்ளார்.அடுத்த சில நொடிகளில், கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, அருகிலிருந்த போக்குவரத்து போலீசார், மறைமலை நகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள், கார் 80 சதவீதம் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.