/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு ' கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '
கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '
கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '
கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '
ADDED : செப் 19, 2025 12:58 AM
சென்னை, வண்ணாரப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வழக் கில் கைதான ஆந்திர மாநில வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மின்ட் பேருந்து நிலைய பகுதியில், கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மங்காராஜு, 32 என்பவரை, வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
அப்போது, அவரிடம் இருந்து, 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மங்காராஜு மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறி, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.