/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நெட்டுக்குப்பத்தில் திடீர் காளி கோவில் இரு தரப்பு மோதல் அபாயத்தால் பீதி நெட்டுக்குப்பத்தில் திடீர் காளி கோவில் இரு தரப்பு மோதல் அபாயத்தால் பீதி
நெட்டுக்குப்பத்தில் திடீர் காளி கோவில் இரு தரப்பு மோதல் அபாயத்தால் பீதி
நெட்டுக்குப்பத்தில் திடீர் காளி கோவில் இரு தரப்பு மோதல் அபாயத்தால் பீதி
நெட்டுக்குப்பத்தில் திடீர் காளி கோவில் இரு தரப்பு மோதல் அபாயத்தால் பீதி
ADDED : மார் 23, 2025 12:38 AM

எண்ணுார், எண்ணுார், நெட்டுக்குப்பம் 3வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 38. இவர், தன் வீட்டில் சிவசக்தி காளி கோவில் கட்டியுள்ளார்.
வீட்டிற்குள் வழிபாடு நடத்திய நிலையில், திடீரென மதில் சுவரை இடித்து கோவில் வெளியே தெரியும்படி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், 'மீனவ கிராமத்திற்குள் காளி வழிபாடு கிடையாது. இந்த கோவிலால், மீன்பிடிக்க செல்பவர்களுக்கு வேலை இருப்பதில்லை. மேலும், ஏழு பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். எனவே, கோவிலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார், மாநகராட்சி மற்றும் வட்டாட்சியரிடம் ஊர்மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திருவொற்றியூர் வட்டாட்சியர் சகாயராணி உள்ளிட்ட வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, மக்கள் அச்சப்படும் நிலையில் கோவிலில் உள்ள காளி சிலையை அகற்றிடும்படி, வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு வீட்டின் உரிமையாளர், 'காளி சிலையை அகற்ற முடியாது. தங்களால் முடிந்தவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினர். இது குறித்து, கலெக்டர் ஆலோசனை பெற்று, திங்கட்கிழமை காளி சிலை அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து, அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில், இரு தரப்பு மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், கோவில் வாயில் பகுதி, தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
அதேநேரம், கார்த்திக் தரப்பிலும், 'ஊரை விட்டு எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். காளி சிலையை அகற்றும் படி, கூறுகின்றனர்' என, எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.