/உள்ளூர் செய்திகள்/சென்னை/அதானி அறக்கட்டளை உதவியுடன் காட்டூரில் இயற்கை விவசாயம்அதானி அறக்கட்டளை உதவியுடன் காட்டூரில் இயற்கை விவசாயம்
அதானி அறக்கட்டளை உதவியுடன் காட்டூரில் இயற்கை விவசாயம்
அதானி அறக்கட்டளை உதவியுடன் காட்டூரில் இயற்கை விவசாயம்
அதானி அறக்கட்டளை உதவியுடன் காட்டூரில் இயற்கை விவசாயம்
ADDED : பிப் 24, 2024 12:06 AM
சென்னை, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை மற்றும் அதானி அறக்கட்டளை, தமிழக அரசின் இயற்கை விவசாய சான்றளிக்கும் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விளைந்த நெல் தானியங்களுக்கு, நல்ல விலை கிடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன்படி 2023 - 24ல் இயற்கை விவசாய சான்று பெற, திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் நான்கு விவசாய குழுக்களைச் சேர்ந்த, 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் வாயிலாக, 127 ஏக்கரில் இயற்கை விவசாய சான்றுக்கு பதிவு செய்யப்பட்டு, நெல் சாகுபடி இயற்கை விவசாய முறைகளுடன் மேற்கொள்ளப்பட்டன.
இயற்கை இடுபொருட்களான பசுந்தாள் உர விதைகள், உயர்விளைச்சல் நெல்ரக விதைகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நான்கு விவசாய குழுக்களைச் சேர்ந்த, 100 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, காட்டூரில், நேற்று நடந்தது.
இதில், திருவள்ளூர் சார் - ஆட்சியர் வஹே சங்கீத் பல்வந்த், பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், அதானி காட்டுப்பள்ளி மற்றும் எண்ணுார் துறைமுக கேப்டன் மதன்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.