தூத்துக்குடி ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
தூத்துக்குடி ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
தூத்துக்குடி ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

சென்னை: சென்னை, கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தீவிர வலைவீசி தேடி வந்தனர். இவர் மதுரை எஸ். எஸ்., காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.